திருவண்ணாமலை அடுத்த வாழச வச்சனூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு வேளாண் கல்லுரி மற்றும் ஆராய்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி கிரிஜா கடந்த பத்து தினங்களக்கு முன்பு கல்லுரிரியில் பேராசிரியர் தங்கபாண்டியன் மீது பாலியல் புகார் தெரிவித்ததுடன் அதற்க்கு உதவியாக இருந்த மைதிலி மற்றும் புனிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நீதிபதி மற்றும் மாவட் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடந்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக உயர் மட்ட விசாரணை குழு தலைவர் பேராசிரியர் சாந்தி தலைமையில் 4 பேர் கொண்ட குழு 5 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஜரான மாணவியிடம் முழு விசாரணை செய்தவற்றை பதிவு செய்யப்பட்டதுடன் அதன் முழு தகவல் அணைத்து பல்கலை கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கபடும் என்றும் மாணவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தார். அதை தொடாந்து மாணவி கிரிஜா பேசுகையில் விசாரணை குழு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாங்களுடன் பதில் தந்ததாகவும் இருந்தாலும் திருப்தி இல்லை என்று கூரிய அவர் வேறு கல்லூரிக்கு மாற்றம் கோர போவதில்லை என்றார். அத்துடன் புகாரில் குறிப்பிட்ட அனைவரின் பேரில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தொவித்தார்.
Girija, a second year student at the Tamil Nadu Government Agricultural College and Research Center, located in Vannanur,