தமிழகத்தின் கோவையை சேர்ந்த ஷதி என்ற ஆசிரியைக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினமான இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் சில்வர் மெடல் ஆகியவை ஆசிரியை ஸதிக்கு வழங்கப்படும். இந்நிலையில் பிரதமர் மோடியை ஆசிரியை ஸதி நேரில் சந்தித்தார்.