காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த அரசு மருத்துமனையில் நிர்வாக சீர்கேடு காரணமாக பல முறைகேடுகள் நடந்து வந்துள்ளதை சத்தியம் தொலைக்காட்சி அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளது. தற்போதும் மருத்துவமனையில் உள்ள 12 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.