குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குட்கா மற்றும் பான்மசாலா தொடர்படைய மாதவ்ராவ் என்ற நபரை நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே சந்திக்காத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி தன்னை அரசியலில் இருந்து அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிப்பதாக தெரிவித்துள்ளார்.