தூத்துக்குடி கந்தன்காலணியை சேர்ந்த லூயிஸ் சோபியா என்ற மாணவி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அந்த விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் பயணம் செய்தார். பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அரசை விமர்சித்து மாணவி சோபியா கண்டன கோஷங்கள் எழுப்பினார். அப்போது தமிழிசைக்கும், சோபியாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.