நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்தார். மருத்துவர்களின் வேண்டுகோளை ஏற்ற மாணவனின் பெற்றோர்கள் உடல் உறுப்புகளை தானமாக அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாணவரின் உடலுறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, கல்லீரல் கோவை கே.எம்.சி மருத்துவமனைக்கும் சிறுநீரகம் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கண்கள் வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது.