ஆந்திர மாநிலம் திருப்பதி - திருச்சானூர் இடையே சின்னா என்பவருக்கு சொந்தமான மேடை அமைக்கும் நிறுவனம் உள்ளது. அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தின் கிடங்கில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.