எம்எல்ஏ ஈஸ்வரன் திருமணம் திரும்பவும் நின்னு போயிடுச்சாம்! 43 வயசாகிய
பின்பு, ஒருவழியாக கல்யாணத்துக்கு சம்மதிச்சார் பவானிசாகர் எம்எல்ஏ.
அதற்காக சந்தியா என்ற 23 வயது பெண்ணை பேசி முடித்து, திருமணத்திற்கு
நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் சந்தியாவோ வீட்டை விட்டு வெளியேறி,
அதனால் அவரது தாய் போலீசில் புகார் கொடுக்க, அதன்பேரில் போலீசார்
சந்தியாவை வலைவீசி தேட கடைசியில் ஒருவழியாக திருச்சியில் மீட்டனர்.
பின்பு நீதிபதியிடம் சந்தியாவை கொண்டுபோய் நிறுத்தியபோது, "எம்எல்ஏக்கு
என் அப்பா வயசு அவருக்கு. நான் எப்படி கல்யாணம் பண்ணிப்பேன். என் வீட்டில
கட்டாயப்படுத்தறாங்க" என்று சொன்னபிறகு நீதிபதி பெற்றோரை அறிவுரைத்து
சந்தியாவை அவர்களுடன் அனுப்பி வைத்தார். இதனால் சந்தியாவுடன்
ஈஸ்வரனுக்கு திருமணம் நடக்காமல் நின்றுபோய்விட்டது.
MLA eswaran marriage stopped second time