தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது என்றும் பராமரிப்பு பணியினால் தொய்வு ஏற்பட்டிருக்கலாம் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். இதனிடையே அதிமுக ஆட்சி முடிவுக்கு வருவதை மின்வெட்டு உணர்த்துகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.