சம்மன் இல்லாமலும் அபிடவிட்! தூத்துக்குடி துப்பாக்கி சூடு

Oneindia Tamil 2018-09-22

Views 91

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, சம்மன் அனுப்பித்தான் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை சம்மன் இல்லாமலும் வந்து அபிடவிட் தாக்கல் செய்யலாம் என தூத்துக்குடியில் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் தெரிவித்தார்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு போலீஸ் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கமிசன் 6 மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக, சம்மன் அனுப்பித்தான் தெரிவிக்க வேண்டும் என்பதில்லை சமன் இல்லாமலும் வந்து அபிடவிட் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார் இதைத்தொடாந்து ஆணையம் முன்பு துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களிடம் நடந்த விபரங்களை ஆணைய அதிகாரிகள் விளக்கமாக கேட்டதாகவும், மேலும் இறந்த கந்தையாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் உள்ளதால் அரசு தரப்பில் கூடுதல் நிவாரணம் கேட்கப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றனர்.

Tuticorin Commission prosecutor Aruldavelal said that the Tumkuriyi gans should not be reported and the absence could be filed without the consent.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS