நகைச்சுவைப் புயல் வடிவேலுவின் பிறந்த நாள் இன்று. குடல் குந்தாணிகள் எல்லாம் கதறக் கதற சிரிக்க வைக்கும் வடிவேலுவுக்கு 58 வயதாகிறதாம். உலகம் முழுக்க தமிழ் வாய்களை மட்டுமல்லாமல் மொழி தெரியாதவர்களையும் கூட சிரிக்க வைக்கும் சிலாகிப்பான முகம், ஸ்டைல் வடிவேலுக்கு மட்டுமே உண்டு. ஸ்கிரீனில் நின்றாலே சிரிப்புதான்.. இடையில் சறுக்கினாலும் இன்னும் வடிவேலுவை தங்களது மனதிலிருந்து இறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள்.