மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியை மலை கிராம வாசி ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வெள்ளிங்கிரி அடுத்த தாணிக்கண்டி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சன்.இவர் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நார்த்காடு வனப்பகுதி வழியாக பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது நஞ்சனை வழிமறித்த ஒற்றை காட்டு யானை கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதில் படுகாயமடைந்த நஞ்சன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து அவ்வழியே சென்ற மலை கிராமத்தை சேர்ந்த சிலர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறை மற்றும் காவல் துறையினர் நஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோத்னைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆலாந்துறை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் கடந்த ஒரு வாரத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழக்கும் மூன்றாவது நபர் நஞ்சன் என்பது குறிப்பித்தக்கது
Des: In the mountainous region of Odai, the Western Ghats has killed a single wild elephant and the tragedy has caused a tragedy in the area.