இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதுவது போல் வந்ததில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் நான்கு பேர் கைது
சென்னை அம்பத்தூர் பிரிதி வாக்கம் பகுதியில் இருசக்கரவாகனத்தில் பாலசுந்தரம் என்பவரும் மணிகண்டன் என்பவரும் எதிரெதிரே வந்து உள்ளனர். மோதுவது போல் வந்ததால் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி பாலசுந்தரம் மணிகண்டன் கன்னத்தில் பலமாக அறைந்ததாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த மணிகண்டன் அவரது அண்ணன் மகேஸிடம் கூறி மகேஷ் தனது நண்பர்களுடன் சென்று பாலசந்தர் அவரது வீட்டிற்கு சென்று மனைவி கண்முன்னே தாக்கி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கே.கே.சாலையின் அருகில் மகேஷ் மற்றும் அவரது நண்பர்களை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அம்பத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து மகேஷை தாக்கிய சசி,பாலசந்தர்,சத்திஷ்,தினேஷ் ஆகிய நால்வரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
Des: One person was injured in a clash with two-wheeler coming face-to-face