இலவசங்களால் தான் வளர்ச்சி! விஜய்க்கு அமைச்சர் காமராஜ் பதில்-வீடியோ

Oneindia Tamil 2018-11-13

Views 232

கல்வி துறையில் மடிக்கணினி உள்ளிட்ட இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் 19 வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ்,கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உணவை விநியோகம் செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் புதிதாக 1 கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் விலையில்லா பொருட்கள் வழங்குவதை அனைத்து மக்களும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். கல்வி துறையில் மடிக்கணினி உள்ளிட்ட இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.விலையில்லா பொருட்கள் வழங்குவதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என கூறுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் என்றார்.

Des: Minister Kamaraj said that Tamilnadu has grown in higher education in the education sector as it has been provided free of cost including laptops.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS