போராட்டம் செய்யாமல் இருந்தால் நல்லது நடக்கும் !அமைச்சர் பேச்சு- வீடியோ

Oneindia Tamil 2018-11-20

Views 1.9K

பொதுமக்கள் போராட்டம் செய்யாமல் கோரிக்கைகள் கொடுக்கும் பட்சத்தில் மாவட்டநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் , என உணவுத்துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்

திருவாரூர் அருகே அரசுபள்ளிகளில் உள்ள முகாம்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 498 குடும்பங்களை தங்க வைத்துள்ளனர் ,அவர்களுக்கு தேவையான அரிசி , மண்ணென்னை , வேட்டி, சேலை போன்ற நிவாரணங்களை கூட்டறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு , பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி, உணவுதுறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் வழங்கினர் ,அவர்களுக்கு தேவையான மருத்துவ கேம்ப் மற்றும் உணவுகள் என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன,பின்னர் செய்தியாளர்களிடம் உணவுத்துறைஅமைச்சர் ஆர்.காமராஜ் – திருவாரூர்மாவட்டம்கஜாபுயலால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறது ,பாதிப்புகளை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது,கூடுதலாக அமைச்சர்கள் , முதன்மை செயலாளர்கள், IAS அதிகாரிகள் என பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு வருகின்றனர் , முகாம்களில் தங்கவைத்துள்ள அணிவருக்கும் நிவாரணமாக அரிசி , வேஷ்டி , சேலை , என அத்யாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது ,

வீடுகள் 1 லட்சத்து 12 ஆயிரம் சேதம் அடைந்ததாக தகவல் வந்துள்ளது , கணக்கெடுப்புக்கு பின் முழு விவரம் தெரிய வரும் , தமிழகமுதல்வர் நாளை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வருவதாக அறிவித்துள்ளார் , பொதுமக்கள் போராட்டம் செய்யாமல் கோரிக்கைகள் கொடுக்கும் பட்சத்தில் மாவட்டநிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் , என தெரிவித்தார் .

Des: The district administration will take immediate action if the public will not be willing to fight, "said Minister of Agriculture R. Kamaraj.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS