அதிமுகவினர் 3பேர் விடுதலை.. இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்பாட்டம்-வீடியோ

Oneindia Tamil 2018-11-22

Views 2.3K

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அதிமுகவினர் மூன்று பேரை விடுதலை செய்த ஆளுநர் மற்றும் தமிழக அரசைக்கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் காட்பாடியில் ஆர்பாட்டம்

வேலூர்மாவட்டம்.காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா 2000 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கோவை வேளாண் கல்லூரி பேருந்து தீயிட்டு கொளுத்தப்பட்டது இதில் 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தனர் இந்த வழக்கில் முனியப்பன் ,நெடுஞ்செழியன்,ரவீந்திரன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இந்த நிலையில் வேலூர் தொரப்பாடி ஆண்கள் மத்திய சிறையிலிருந்த மூவரும் ஆளுநர் ஒப்புதலுடன் எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழாவிற்காக சிறையிலிருந்து ஊடகங்களுக்கு தெரியாமல் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டனர் இந்த மூவரும் மாணவி சாவுக்கு காரணம் என கூறி இவர்களை விடுவித்த அண்ணா திராவிட முன்னேற்றகழக அரசைக்கண்டித்தும் ஆளுநர் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் சங்க மாவட்டத்தலைவர் திலீபன் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Des: The Governor and the Government of Tamil Nadu have released three persons in the Dharmapuri bus burning case

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS