சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகேயுள்ள பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியகிரி ராவ்(30), ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா(26), இவர்களுக்கு திருமணம் ஆகி லோகேஷ்(5), சர்வேஷ்(3), என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாரிவாக்கம், கங்கை அம்மன் கோவில் குளம் அருகே உள்ள மரத்தடியில் நண்பர்களுடன் சத்தியகிரி மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது அந்த இடத்திற்கு ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், சத்தியகிரியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில்கொலை செய்யப்பட்ட சத்தியகிரி ஆவடியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் சங்க செயலாளராக இருந்துள்ளார். மேலும் அயனாவரம், சோழவரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் சத்தியகிரி மீது கொலை வழக்குகள் உள்ளது. பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் சத்தியகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்துள்ளார். மேலும் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து இந்த கொலை தொடர்பாக அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த பூபாலன் (27), சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஷபீர் (24), பாலாஜி (37), ஆவடியை சேர்ந்த அஜீத் என்ற ஜெகன்னாதன் ( 25), திருமுல்லைவாயலை சேர்ந்த ஜார்ஜ் என்ற விஜய் பாபு (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர்
Des: 5 people arrested in Auto Driver murder case