ஆபாச வீடியோ விவகாரம்.. பாத்திமாபாபு வேதனை- வீடியோ

Oneindia Tamil 2018-11-24

Views 5

ஆபாச வீடியோ விவகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து புகார் மனு அளித்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முடக்குவதற்கு அந்நிறுவனம் பல உத்திகளை கையாண்டு உள்ளது. அதில் இன்று உச்சகட்டமாக மிகவும் கேவலமான ஒரு உத்தியை கையாண்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளோம். அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர். மனுவில் யாரையும் குறிப்பிட்டு நாங்கள் புகார் அளிக்கவில்லை. பரவிவரும் வீடியோவினால் எங்கள் போராட்டத்தில் ஒரு காலமும் பின்னடைவு ஏற்படாது.எனில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முடக்குவது ஒன்றே அவர்களது குறிக்கோள். எனவே அது ஒருபோதும் நிறைவேறாது. இது தொடர்பான விளக்க அறிக்கையை நாங்கள் பின்னர் வெளியிடுவோம். புகார் மீதான சட்டப்படியான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் என கூறினார்.

Des: Sterlite anti-people activist coordinator Fatimababu Thoothukudi District Police Superintendent

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS