ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பாக பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் 21 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று சாதனை
ஜம்மு-காஷ்மீர் பல்கலைக்கழக மைதானத்தில் தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேக்வண்டா, ஜூடோ, பாக்சிங், தடகளம் என பல்வேறு போட்டிகளில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 14 ,17 மற்றும் 19 வயது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழகத்தின் சார்பாக சேலம்,நாமக்கல், சென்னை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 21 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றனர். இந்நிலையில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகள் சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
இதுகுறித்து வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் கூறும்போது, மிக நீண்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டு மாணவ மாணவிகளை தயார் செய்ததாகவும், காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று உள்ளதாகவும் கூறினார். மேலும் அடுத்த கட்டமாக நேபாளில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Des: 21 gold, a silver and a bronze ..