தற்போது வாகனங்கள் அதிவேகமாக செல்வதையும், அதனால் ஏற்படும் விபத்துக்களையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இங்கு நடக்கும் சம்பவத்தை அவதானித்தால் செயின் திருடப்போகிறார்களோ என்று தான் நினைப்பீர்கள். ஆனால் நடந்த சம்பவமே வேறு...
ஆம் சாலையில் தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெண்ணை தொடர்ந்து இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். ஆரம்பத்தில் தவறாக நினைக்கத் தோன்றும் இக்காட்சியில் கடைசியில் அந்த பெண்ணின் கையில் ஏதோ ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.
இதனையெல்லாம் சிறிதும் கவனிக்காமல் அந்த பெண்ணை வைத்து வாகனத்தை ஓட்டிச் செல்லும் காட்சி மிகவும் கொமடியாக அமைந்துள்ளது.