கடலூர்மாவட்டம் விருதச்சலம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். விவசாயியான இவரது ஓரே மகள் மகள் சென்பகவள்ளி சிறுவயதிலேயே தாய்யினை இழந்துவிட்டார். இந்நிலையில் தனது மகளை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த முத்துகிருஷ்ணன் +2வரை அவரை தனது சொந்த ஊரிலேயே படிக்க வைத்தார். பி்ன்னர் விவசாயியானஅவர் தனது மகளும் விவசாயம் சம்ந்தமான கல்வி பயில வேண்டும் என்று எண்ணி சென்னைமாதவரத்தில் உள்ள தோட்டகலை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து வந்தார். இந்நிலையில் சென்பகவள்ளியின் தோழிகள் கல்லூரி வகுப்பினை முடித்து விட்டு விடுதி திரும்பியபோது விடுதி அறையில் சென்பகவள்ளி மின்விசியில் தூக்கிட்டு தொங்கியவாறு இறந்த நிலையில் காணப்பட்டார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் இது குறித்து விடுதி வார்டனிடம் தகவல் தெரிவிக்க அவர்கள் மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து சக மாணவியரிடம் விசாரித்தபோது காலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை வயிறு வலிப்பதாகவும் அதனால் தான் இன்று கல்லூரிக்கு வரவில்லை விடுதி அறையிலேயே ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். பின்னர் தாங்கள் கல்லூரி முடித்து திரும்ப வந்தபோது இந்த துயரசம்பவம் நிகழ்ந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாக அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Des: The girl who was thrown up in the hotel ... cried the parent