சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு.. அனல்பறக்கும் சிபிஐ விசாரணை- வீடியோ

Oneindia Tamil 2018-12-27

Views 316

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் சிபிஐ விசாரணை நான்காவது கட்டமாக தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது


கடந்த மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க திரண்டு வந்திருந்த போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது இதில் 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த வழக்கு மாநில காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது பின்னர் சிபிசிஐடி இருந்து சிபிஐக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது சிபிஐ முதற்கட்டமாக துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட வட்டாட்சியர் சந்திரன் மற்றும் துணை வட்டாட்சியர்கள் கண்ணன், சேகர் ஆகியோரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தியது இரண்டாம் கட்டமாக மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருந்த 249 வழக்குகளில் 210 வழக்குகளை வாங்கி அதனை விசாரணை மேற்கொண்டது மூன்றாம் கட்டமாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நான்காவது கட்டமாக துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்ட காட்சி சாட்சிகளை விசாரித்து வருகின்றனர். மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மேற்கண்ட அளவிற்கு வந்து சிபிஐயிடம் தங்களது நேரில் கண்ட சாட்சியை கூறலாம் எனவும் தெரிவித்துள்ளனர் தற்போது நான்காவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது இதற்கிடையே நேற்று மூன்று கட்ட விசாரணையின் அறிக்கையை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Des: Hot fire shoots .. CBI investigating disaster

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS