சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நிறைய தங்கும் விடுதிகளும், சுற்றுலா தளங்களும், பன்னை வீடுகளும் மேலும் கடலையொட்டிய சாலை என்பதால் சென்னையில் உள்ள அனேக இளைஞர்கள் புத்தாண்டு இரவில் கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுப்படுவதும், மது அருந்திவிட்டு இருச்சக்கர வாகனங்ளில் சாகாசம் செய்வதும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருச்சக்கர வாகனங்களின் சைலன்சர் சத்தத்தை மாற்றி ஓட்டுவதுமாய் காணப்படுவர், ஆனால் வரும் புத்தாண்டில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்த கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் உதவி ஆய்வாளர் ஆனந்த்ராஜ் ஆகியோரின் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்ட தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இருச்சக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்திருந்தாலும் வாகனத்தின் உரிமங்கள், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகள் சரியாக உள்ளனவா? எனவும் பாண்டிச்சேரியிலிருந்து மதுபானங்கள் கடத்தி வரப்படுகிறதா? குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலை முழுவது சிசிடிவி பொருத்தப்பட்டு போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதால் எந்த ஒரு குற்றங்களிலும் இளைஞர்கள் ஈடுப்பட்டாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
New Year Emergency Conditions