பட்டப்பகலில் வீடு புகுந்து கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் .சேலத்தில் பயங்காரம்

Oneindia Tamil 2019-01-05

Views 3.3K

சேலம் ரெட்டியூர் பகுதியில் பூசாரிநகரில் சுரேஷ் மற்றும் நந்தினி தம்பதியினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அதே குடியிருப்பில் அதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளர் பிரமுகர் ஏகேஎஸ்எம். பாலு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இரு குடும்பத்தினரும் உறவினர்கள். இந்த நிலையில் இரு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் காலை சுரேஷ் வீட்டில் இல்லாதபோது அதிமுக நிர்வாகி பாலுவின் மகன் குமார் தனது நண்பர்களுடன் கையில் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ஜன்னல் கண்ணாடி மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.இதனை நந்தினியின் தம்பி அஜித்குமார் தட்டிக்கேட்க இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அழகாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த அடிதடியில் இரண்டு மாத கர்ப்பிணி பெண் நந்தினி மற்றும் அவரது தம்பி அஜித்குமார் இருவர் காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அஜித்குமார் தாக்கியதாக எதிர்தரப்பை சேர்ந்த ரமேஷ் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஒருவன் நண்பர்களுடன் வீடு புகுந்து கர்ப்பிணி பெண்ணை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Entering the house in a barracks and @ttack1ng a pregnant woman

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS