தாயை கவணிக்காத தந்தையை வெட்டிகொன்ற மகன் காவல்துறையில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர்மாவட்டம்,காட்பாடி அருகேயுள்ள வஞ்சூரை சேர்ந்தவர் கண்ணன் இவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி நிர்மலா இவர் உடல் நலம் சரியில்லாமல் கடந்த 13 ஆம் தேதி மரணமடைந்தார் மகன் பிரபு இவர் ஊரீசு கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படிக்கிறார் கண்ணன் வீட்டிற்கு பணம் கொடுக்காமல் தன் தாய் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் அவரை கவணிக்காமல் விட்டதால் தான் அவர் இறந்ததாக ஆத்திரமடைந்த மகன் பிரபு தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தந்தையை கத்தியால் வெட்டிகொலை செய்துவிட்டு தானே காட்பாடி காவல்நிலையம் சென்று சரணடைந்தார் இதுகுறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இறந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தந்தை கண்ணன் அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததால் தான் தாயை கவணிக்கவில்லை என்று மகன் கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
DES: Daddy's father is a son who has been killed in a stupid mother