இந்த தங்கைக்கு எப்போது பதவி?

Dinamalardaily 2019-01-24

Views 1

பிரியங்காவுக்கு அவரது அண்ணன் ராகுல்
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியை வழங்கியதை போல்

கனிமொழிக்கு அவரது அண்ணன் ஸ்டாலின்
திமுகவில் முக்கிய பதவியை வழங்கி
கட்சியை வலுப்படுத்த முன்வருவாரா என்று
திமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரியங்கா இதுவரை தன் அம்மா, அண்ணன் போட்டியிட்ட
ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மட்டுமே கட்சிக்காக
தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.
ஆனால் கனிமொழியோ தன் தந்தையும் அண்ணனும்
போட்டியிட்ட தொகுதிகள் மட்டுமின்றி
தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி சுழன்று
திமுகவுக்காக தீவிர பிரசாரம் செய்துள்ளார்.

எனினும், கட்சியை வளர்ப்பதில் கனிமொழியில் ஆற்றலை
ஸ்டாலின் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பது
திமுகவில் பலரது ஆதங்கமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, கருணாநிதியின் மறைவாலும்
அழகிரி நீக்கத்தாலும் மனம் சோர்ந்துள்ள தொண்டர்களை
உற்சாகப்படுத்த ஸ்டாலின் முயற்சி எடுக்கவில்லை என
சில சீனியர்களே வருத்தத்தில் இருக்கிறார்கள்.

திமுகவின் பல்வேறு கிளை அமைப்புகளில் ஒன்றான
மகளிர் அணியின் செயலாளர் பொறுப்பு மட்டுமே
கட்சியில் கனிமொழிக்கு தரப்பட்டுள்ளது.

அவரது ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் 5 மாதத்தில் முடிகிறது.
இதுவரை சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிடாத கனி
இம்முறை தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக
களம் காண ஆசைப்படுகிறார்.

அண்ணன் சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை.
“நான் வேட்பாளராக நிறுத்தப்படுவேனா என்பதை
தலைவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்”
என்று பந்தை அறிவாலயத்துக்கு திருப்பினார் கனிமொழி.

பை தி வே, பிரியங்காவுக்கு ட்விட்டரில்
வாழ்த்து சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.


Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS