மணலி மார்க்கெட் பகுதியில் ஓரமாக நிறுத்தி வைத்த விக்னேஷ் மற்றும் சரவணன் ஆகியோரது ஆட்டோவை சதீஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் இவர்களை தாக்கி ஆட்டோவை பறிமுதல் செய்து எம்6 மணலி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைத்துள்ளார் இதை கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் தொடர்ந்து எங்களுடைய ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள் எங்களுக்கு சரியான இட வசதி செய்தாள் நாங்கள் அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தி கொள்வோம் ஆட்டோ டிரைவர்களை அடித்து துன்புறுத்தி தகாத வார்த்தைகளால் பேசியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு வைத்தனர் மணலி பகுதியில் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது இதை தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆட்டோ ஓட்டுனரிடம் சமரசம் பேசி உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் மற்றும் ஆட்டோக்களை விடுவிப்பதாக தெரிவித்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் கலைந்து செய்தனர்.