பிரியங்கா காந்தியால் பயப்படும் பாஜக-முதல்வர் நாராயணசாமி பேச்சு- வீடியோ

Oneindia Tamil 2019-01-28

Views 309

டெங்கு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு பேரணி புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு டெங்கு நோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் டெங்கு கொசு போன்ற வேடமணிந்தும், டெங்கு நோய் தடுப்பது குறித்த பொருட்களை கையில் சீர்வரிசையாக ஏந்திச் சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டுமென்பது அனைத்து கட்சிகளின் கருத்தாக உள்ளது என்றும், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளான ஜப்பான், சீனா, பிரான்ஸ் நாடுகளில் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை பின்பற்றும் போது வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவதில் தவறு இல்லை என கூறினார். மேலும் பேசிய அவர், பாஜகவினர் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக கூறினார். மேலும் பிரியங்கா காந்தியின் வருகையால் எந்த பயமும் ஏற்படவில்லை என் பாஜக தலைவர்கள் கூறுவது அவர்களின் பயத்தை காட்டுவதாகவும், பிரியங்கா காந்தியின் வருகையா பாஜகவின் பலம் குறைந்துள்ளதாக நாராயணசாமி கூறினார்.



DES : Priyanka Gandhi is afraid of the BJP

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS