கெட்ட வார்த்தையில் திட்டுவது
ஆண்மையின் அடையாளம் அல்ல;
திட்டுபவன் குடும்பம் எவ்வளவு மட்டமானது
என்பதை அம்பலப்படுத்தும் செயல்
என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
போலீஸ் அசிங்கமாக பேசியதை தாங்காமல்
ரயிலில் பாய்ந்து தறிகொலை செய்துகொண்ட
டாக்சி டிரைவரின் வீடியோ வாக்குமூலம்
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
போலீஸ்காரர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள்
என்று டாக்டர் அபிலாஷாவை கேட்டோம்.