புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரிந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் அரசு பொது மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம்.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணிபுரிந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கோரியும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளி கவனிப்புப்படியினை இரு மடங்காக உயர்த்த கோரியும் , பயணப்படி, சீருடை படி ஆகியவைகளை முன்தேதியிட்டு வழங்க கோரியும் , கடந்த ஜனவரி மாதம்29ஆம் தேதி முதல் புதுவையில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் வாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கருணை அடிப்படையில் 80க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்கப் பட்டது. ஆனால் அதில் விடுபட்டுள்ள மீதமுள்ள குடும்பத்தினருக்கு பணி வழங்க கோரி, இன்று காலை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முன்பு, புதுவை சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கூட்டு நடவடிக்கைகுழுவை சேர்ந்த ராஜ்குமார் ஜானகி பிரபாத் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
DES : The Joint Action Committee of Health Sector Workers requested to give charity workers the benefits of Thousand Workers'