புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர வழிபாட்டுக்கு புகழ்பெற்றது. இந்தக் கோவிலில் கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது திருப்பணிகள் நடைபெற்று குடமுழுகுக்கு நடைபெற்றது. சோழர் கால சிற்பக் கலை, கல்வெட்டுகள் மற்றும் கருங்கற் சுவர்களை மறைத்து உருவாக்கப்பட்ட சிமிண்ட் கட்டுமானங்களை அகற்றி திருப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக பக்தர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கிய நிலையில் இன்று புனித நீர் கலசங்களுடன் கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் குடமுழுக்குச் செய்தனர்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்ள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
des ; Thirunallar Saneeswaran Temple Many devotees are devotees Puducherry.