வேலை வாய்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை- விஜய்கார்த் பேச்சு- வீடியோ

Oneindia Tamil 2019-02-14

Views 791

பொதுத்துறையில் கட்டிடக்கலை மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்கள் தனியார் கம்பெனிகளை நாடிவருவதாக இந்திய கட்டிடக்கலைக் கவுன்சில் தலைவர் விஜய்கார்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் முகமது ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் 3 வது பட்டமளிப்பு விழா.கல்லூரி செயலர் செகு ஜமாலுத்தீன் தலைமையில் இந்திய கட்டிடக்கலை கவுன்சில் தலைவர் விஜய்கார்த் கலந்து கொண்டு 62 கட்டிடக்கலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பல்கலைக்கழக ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற 5 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். பின்னர் பேசிய அவர் கட்டிடக்கலைப் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாகவும். பொது துறையில் கட்டிக்கலைகென்று பெருமளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசின் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் சென்று விடுகின்றனர். பொதுத்துறை வேலை வாய்ப்பு குறித்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என 500கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Indian architect director speech.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS