காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகர கழக அதிமுக சார்பில் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் முன்னால் நகரமன்ற உறுப்பினர் வி.மனோகரன் தலைமையில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அழைபாளராக கலந்துகொண்ட காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன் கலந்துகொண்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். திருவுருவ படம் மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தும், 50 அடி உயர கொடிகம்பத்தில் கழக கொடியேற்றி மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் கேக் வெட்டி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், உட்பட கழக நிர்வாகிகள் மற்று தொண்டர்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்.
Former CM Jayalalitha Birthday Celebration.