விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கீழ்வையலாமூர் கிராமத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த வி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்த இருதயநாதன் தனது 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.அறுவடைக்கு தயாராக இந்த நிலையில் நெற்பயிரை சேதப்படுத்திய எலிகளை கொல்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை மருந்தை கடந்த 5 தினங்களுக்கு முன்பு வரப்பின் மீது தெளித்துள்ளார். இந்நிலையில் அப்பகுதிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்த போது விஷம் ஏறி சம்பவ இடத்திலேயே 3 மாடுகள் இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர்கள் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 45 மாடுகள் மிகவும் மயக்க நிலையில் இருந்ததையடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து மீதமுள்ள மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் வி.நல்லாளம் கிராமத்தை சேர்ந்த சவுரிமுத்துவின் 6 மாடுகளும், கீழ்வையலாமூர் கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸின் 4 மாடுகளும், அவரது தம்பி சின்னையனின் 3 மாடுகளும் ஆக மொத்தம் 13 மாடுகள் ஒரே நாளில் இறந்த சம்பவம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The 13 villagers who went to grazing in the farm land were shocked by the rural villagers
#Farmers
#Villagers
#FarmLand
#Vizhuppuram