தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் வேட்பாளர் திருப்பூரில் தெரிவித்தார். திருப்பூரில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் சார்பில் வேட்பாளராக நல்ல சாமி போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனிச்சாமியிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார். மேலும், தினம்தோறும் மக்கள் குடிநீருக்காக அலைமோதும் நிலையில் குடிநீர் தேவைகளையும் மற்றும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க தங்களது கட்சி இரவும் பகலுமாக உழைக்கும் என்று தெரிவித்தார். இதனையடுத்து தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் வேட்பாளருக்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியும் உற்சாகப்படுத்தினர்.
des : All the rivers are interviewed by the candidate of the nationalized labor farmers' union