திமுக என்பது பனங்காட்டு நரி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது

Oneindia Tamil 2019-04-01

Views 926

வேலூர்மாவட்டம்,காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகனுக்கு சொந்தமான கிங்கஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் துரைமுருகன் கல்வியியல் கல்லூரி உள்ளது இன்று அதிகாலை முதலே கல்லூரி மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை செய்தனர் வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில் கல்லூரி முழுவதும் வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையின் அதிகாரிகள் வாக்கிற்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து காவல்துறையினர் நுழைவாயிலில் குவித்து கல்லூரி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனை இரவு வரையில் தொடர்ந்து 16 மணி நேரம் நடைபெற்றது துரைமுருகனிடமும் வருமானவரித்துறையினர் விசாரணையும் மேற்கொண்டனர் இந்த சோதனை பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் திமுக பிரமுகர்களான ஆலங்காயம்,தேவராஜ், குடியாத்தம் சக்கரவர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பின்னர் திமுக பொருளாளரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் எங்களை பயமுறுத்த அச்சுறுத்த இந்த சோதனையை செய்துள்ளனர் நாங்கள் இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் அஞ்ச போவதில்லை நாங்கள் மீசா போன்ற சட்டங்களை எல்லாம் சந்தித்தவர்கள் திமுக என்பது பனங்காட்டு நரி இந்த சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது என்று கூறினார்

Duramurugan's own college and household income tax department and polling booths tested

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS