காட்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்.. போக்குவரத்து பாதிப்பு- வீடியோ

Oneindia Tamil 2019-04-09

Views 228

வேலூர் மாவட்டம் ,காட்பாடி விருதம்பட்டில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்பாடி விருதம்பட்டு பகுதிகளில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக குடிநீர் சரிவர வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை தங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் காட்பாடி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் தங்கள் பகுதிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

des : Public road traffic inquiry for drinking water near Katpadi; Traffic vulnerability

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS