தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இருந்து மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பெரியகுளம் அடுக்கம் வழியாக கொடக்கானல் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் அடுத்து அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்த பணிகள் பாதியிலே போடப்பட்டது. அதன் பின்பு கடந்த திமுக ஆட்சியில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கிய சாலை முறையாக போடாத நிலையில் மீண்டு ஆட்சிக்கு வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து மீண்டும் பணிகள் துவஙப்பட்டது. இந்நிலையில் பணிகள் துவக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆன நிலையில் சாலை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மலைச்சாலை அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோடை மழையின் போது சாலைகள் சேதம் அடைந்ததால் தற்பொழுது இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலையால் மலைவாழ் மக்கள் அங்கு விளையும் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் நிறுத்தி உள்ள மலைசாலை பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
des : Road construction in the DMK regime did not turn off the road system