டிடிவி ஜெயித்தால் மட்டுமே மக்களுக்கு லாபம்- சிஆர்.சரஸ்வதி- வீடியோ

Oneindia Tamil 2019-05-11

Views 343

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக ஜெயித்தால் ஸ்டாலினுக்கு லாபம், அதிமுக ஜெயித்தால் இபிஎஸ் ஒபிஎஸ்க்கு லாபம். ஆனால் டிடிவி ஜெயித்தால் மட்டுமே மக்களுக்கு லாபம் என சிஆர்.சரஸ்வதி தூத்துக்குடியில் பிரச்சாரம். தமிழகத்தில் வரும் 19ம்தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்ந்துள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் களம் இறங்கி முழுமூச்சாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அமமக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ., சுந்தர்ராஜ்க்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை பேச்சாளர் சி ஆர் சரஸ்வதி இன்று புதியம்புத்தூர், கேடிசி நகர், தேவர் காலனி, பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது பேசிய அவர் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம். கூவத்தூரில் அன்று கையெழுத்து போடவிட்டால் இன்று எடப்பாடி பன்னிர் செல்வம் மட்டுமல்ல இந்த ஆட்சியே கிடையாது. முட்டி போட்டு முதல்வர் ஆனவர் எடப்பாடி அன்றே சின்னம்மா நினைத்திருந்தால் டிடிவி முதல்வராக ஆக்கி இருக்க முடியும் ஆனால் மூத்தவர்கள் இருக்கட்டும் என்று எடப்பாடியை முதல்வர் ஆக்கினார். மோடியிடம் இரட்டை இலையையும் அதிமுகவையும் விற்று விட்டு அடிமையாக இருக்கின்றனர் என கூறிய அவர் மோடிக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட பகையில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்தான் நாடு குட்டி சுவராக போனது. நாங்கள் மட்டும் எடப்பாடிக்கு ஆதரவாக சென்றிருந்தால் முதல் பேமெண்டாக 50 கோடி கிடைத்திருக்கும் ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஏமாற்றி கொள்ளை அடித்தவர்கள் பக்கம் நிற்பதை விட தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் அணியில் நிற்கிறோம் என்று அவர் பிரச்சாரம் செய்தார்.

DES p: CRS Saraswati is campaigning in Tuticorin that TTV is only profitable for people

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS