திருச்சியில் உள்ள ரஜினியின் பெற்றோர் மணிமண்டப கும்பாபிஷேக விழா-ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கலந்துகொண்டார்திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரஜினியின் தீவிர ரசிகரான ஸ்டாலின் புஷ்பராஜ் என்பவர் குமாரமங்கலம் கிராமத்தில் 1,860 சதுர அடி பரப்பளவில் ரஜினியின் தாய் சௌ. ராம்பாய் - தந்தை ரானோஜிராவ் ஆகியோருக்கு தன் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார். இதில் ரஜினியின் பெற்றோரின் மார்பளவு வெண்கல சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் ஆகியவை உள்ளன. இந்த மணிமண்டபத்தை ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார். மேலும் மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் டத்தோ.டி.மோகன் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் வருகை தந்து பூஜை செய்து சென்றார். இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்தும் ரஜினியின் தீவிர ரசிகர்கள் இந்த மணிமண்டபத்திற்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இந்த மணிமண்டபத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் மற்றும் அவரது உறவினர்கள், ஸ்டாலின் புஷ்பராஜ் குடும்பத்தினர், ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேலும் விருதுநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் 51 சாதுக்கள் வரவழைக்கப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
DES : Rajini's Parents Manimandappa Kumbabisheka Festival