வேலூர் மாவட்டம், ஆம்பூர் கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கடந்த 1985-- 87 ஆம் கல்வியாண்டில் பயின்ற வேலூர் ,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 40 பேர் பயின்று வந்துள்ளனர் இந்த நிலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் ஒன்று சேர திட்டமிடப்பட்டு அதே பயிற்சி நிறுவனத்தில் இன்று 35 மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அவர்களுடன் பயின்ற 4 மாணவர்கள் காலமாகிவிட்டதால் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியும் தனது ஆசிரியர்களான தம்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவரும் சிறப்பு அழைப்பாளராக வரவழைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து வாழ்த்து பெற்று ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர் மேலும் ஒருவருக்கு ஒருவர் தனது வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ச்சியை தெரிவித்தனர் பிறகு முன்னாள் மாணவர்களின் சார்பில் கண்கார்டியா அரசு துவக்க பள்ளிக்கு சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான பீரோ மற்றும் நாற்காலிகள் வழங்கினர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு உபசரிக்கப் பட்டது.
DES : Ex-students meeting in five districts who studied 33 years ago in Ambur!