புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவியில் சேர்ந்த நாள் முதல் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் எங்கும் செல்லாத அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் இன்று திடீரென மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம் ஆகியவற்றுக்கு வந்து தரிசனம் செய்தார்.அவருடன் சில விருந்தினர்களும் வந்தனர்.துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வருவதையறிந்த பொதுமக்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்து, மகிழ்ந்தனர்.அவரிடம் பேட்டி கேட்க முயன்றபோது, நான் கூற விரும்புவது நன்றி மட்டுமே எனக்கூறி புறப்பட்டு சென்றார்.
des : Assistant Governor Scout - I am grateful only to be thankful