வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் பகுதியில் பீடி தயாரிக்க மூலப்பொருளான பீடி இலைகள் சேமித்து வைத்திருக்கும் குடோனில் செயல்பட்டு வருகிறது இது சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சேக் இஸ்மாயில் என்பவர் அதனை வாடகைக்கு எடுத்து அதில் 48 டன் பீடி தயாரிக்க பயன்படும் இலைகள் குடோனில் சேமித்து வைத்திருந்த்தார் . இந்த பொருட்கள் சென்னை பவுட்டா பீடி தொழிற்சாலைக்கு செந்தமானது என கூறப்பஉகிறது இந்த குடோன் பின்புறம் உள்ள இடத்தை இன்று சுத்தம் செய்து குப்பைகளை எரித்துள்ளனர். இதனால் அருகிலிருந்த பீடி இலை சேமிப்பு குடோனில் தீ பற்றி உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் 15 பேர் கொண்ட குழு தீயை அணைக்கும் பணியில் சுமார் 2 மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ கட்டுக்குள் கொண்டுவரும் முயற்ச்சியில் தொடந்து தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் விசாரணையில் சுமார் 80 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் ஏரிந்து நாசமனது தெரியவந்தது மேலும் இந்த தீ விபத்தில் அதுஷ்டவசமாக உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை தீயின் காரணமாக அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
des : A fire broke out in the cotton storing bulb leaves 80 lakh worth of beard leaves