திருச்சி விமான நிலையத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...இன்றைய தினம் பிரச்சாரம் நிறைவடைகிறது தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் நிலையான ஒரு ஆட்சி இருக்க வேண்டும். மத்தியிலே வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டும் திமுக ஏற்கனவே தமிழகத்தை பலமுறை ஆண்டு தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது தண்ணீர் பிரச்சனை இருக்கிறது. திமுக தொலைநோக்குப் பார்வையோடு அவர்கள் ஆட்சி காலத்தில் பணியாற்றி இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.காவிரி பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது மரியாதைக்குரிய மோடி அவர்களின் அரசாங்கத்தினால் தான். காங்கிரஸ் கூட்டணி மேலேயும் கீழேயும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் நிரந்தர தீர்வு கொண்டு வரவில்லை.தேவையில்லாமல் கமல் சில கருத்துக்களை பதிவு செய்கிறார் . இப்படி பேசினால் தான் நமக்கு சிறுபான்மையினர் ஓட்டு வரும் என்று நினைக்கிறாரா என்பது தெரியவில்லை. கமலுடன் ரகசிய உடன்பாடு வைக்கும் அளவிற்கு எங்களுக்கு தேவை ஏற்படவில்லை. எங்களுடைய உறவுகள் எல்லாமே வெளிப்படையான உறவுகள். கோட்சே தேச பக்தர் என்று சொன்னவர்களை எங்கள் கட்சி கண்டித்து இருக்கிறது. காந்தியை கொலை செய்ததற்காக அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் இந்து தீவிரவாதி என்று கமல் கூறுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
des : There should be a constant rule in Tamil Nadu Tamilnadu Soundararajan interviewed at Trichy airport that development projects should continue