தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை- வீடியோ

Oneindia Tamil 2019-06-06

Views 6

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஒரு சில இடங்களில் வெயில் உடன் சேர்ந்து அனல் காற்று வீசி அக்னிநச்சத்திரம் முடிந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளானபெரியகுளம் ,சில்வார்பட்டி, முதலக்கம்பட்டி, ஜெயமங்கலம், ஏ.புதுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி மின்னலுடன் கூடிய சாரல்மழை பெய்தது. காலை நேரங்களில் வெயில் வாட்டி இரவு நேரத்தில் பெய்த மழையால் பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

DES :People's happiness in the rainy season with heavy rainfall in the Periyakulam and its surrounding area in Theni district

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS