ஜாக்கெட் போடாத பிரியங்கா.. முகம் சுளிக்கும் ஆட்டம்..!
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை இன்றி கிளாமராக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மேலாடை இன்றி கிளாமராக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது பாலிவுட், ஹாலிவுட் படங்களில் படு பிஸியாக இருக்கிறார். இவருக்கும், பாப் பாடகரான நிக் ஜோனஸ்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் பிரியங்கா சோப்ரா பொது இடங்களில் கிளாமராக உடை அணிந்து சுற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவ்வளவு ஏன், கடந்த மே மாதம், 72ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடந்தது. இதில், பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் இருவரும் வித்தியாசமான உடை அணிந்து வந்திருந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா மேலாடை இன்று வெறும் சேலை மட்டும் கட்டிக்கொண்டு நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.