வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்தார் கூட்டத்தில் விவசாயிகள் பேசும் போது தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது இதனால் கால்நடைகளுக்கு தீவனம், தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்படும் தீவனப்புல் ஒரு கட்டு ரூபாய் 350 வரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. விலை அதிகமாக இருப்பதால் விவசாயிகளால் தீவனப்புல்லை வாங்க முடியவில்லை இதனால் பால் உற்பத்தியும் பாதித்துள்ளது எனவே தீவனப்புல் விற்பனையை மாவட்ட நிர்வாகமே தொடங்க வேண்டும் மேலும் தீவனப்புல்லை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க வேண்டும். எனவும் மேலும் மாவட்டத்தில் வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்தனர் கூட்த்திற்கு சார் ஆட்சியர் சிவனருள், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
des : Drought relief work should be initiated immediately