தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சனை, சொத்து வரி, பழைய பேருந்து நிலையம் இடமாற்றம் உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை வசதிகளை சீரான முறையில் நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தூத்துக்குடி அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் கூறுகையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சீரானகுடிநீர் விநியோகம், பணிநிறைவடையாமல் உள்ள சாலை பணிகளை மேற்கொள்ளுதல், பக்கிள் ஓடையில் தேங்கியுள்ள நீர் மற்றும் அமலைச்செடிகளை சுத்தம் செய்தல், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவுபடுத்துதல், ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் மற்றும் தூத்துக்குடி மாநகர மக்களின் அத்தியாவசிய அடிப்படை பணிகள் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். டிடிவி.தினகரன் - தங்கதமிழ்செல்வன் மோதல் குறித்து கேட்டதற்கு அது அவர்கள் உட்கட்சி பிரச்சனை என்றார். ஆனால் அதிமுகவிட்டு பிரிந்தவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தங்கதமிழ்செல்வனும் இணையலாம் என்றார்.
DES : Interview with Tuticorin AIADMK Southern District Secretary Thiruvaikundam Assembly Member SP Shanmunanathan.