நடிகர் ஜெயப்ரகாஷ் இந்த நேர்காணல் வாயிலாக, ஒரு தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து மாற்றமடைந்து அடுத்த பரிமாணமாக தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக தான் மாறிய அனுபவங்களையும் தொடர்ந்து இன்று இயக்குனர் சங்கரின் 2.0 திரைப்படம் வாயிலாக ஒரு தேர்ந்த பின்னணிக் குரல் கலைஞராக மாறிய அனுபவங்களையும் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். தன் வாழ்வில் தான் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள விரும்பாத ஒரே விஷயமாக அவர் பகிர்ந்து கொண்டது தமிழில் வெளிவரக்கூடிய அனைத்துத் திரைப்படங்களிலும் தான் இருந்தே ஆக வேண்டும் என்று நினைக்காத மனநிலையைத் தான். எல்லாத் திரைப்படங்களிலும் இடம்பெற நினைக்காமல் நிதானமாகப் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய உழைப்பை வழங்குவதே மக்கள், ரசிகர்கள் தன்னை விரும்புவதற்கான காரணமாக இருக்க முடியும் என்பதில் அவர் தீர்க்கமாக இருக்கிறார்... தொடர்ந்து இந்த நேர்காணலில் நடிப்பு, தயாரிப்பு, பின்னணிக்குரல் கலைஞர் தவிர்த்து இடையில் சில காலம் நடிப்பை ஒதுக்கி விட்டு ஸ்நூக்கர் பார்லர் நடத்திய அனுபவங்களையும் சுவைபட விவரித்திருக்கிறார்.
இது நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே.
முழுமையான நேர்காணல் வெள்ளியன்று வெளியிடப்படும்.
தொடர்ந்து தினமணி.காம் நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் மூலமாக மேலும் பல சிறந்த ஆளுமைகளைச் சந்திக்கலாம்.
விருந்தினர்: நடிகர் ஜெயப்பிரகாஷ் | Actor Jayaprakash
சந்திப்பு: பத்திரிக்கையாளர் கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan
ஒளிப்பதிவு: சுனிஷ் & ஹேம்நாத்
தொகுப்பு: சவுந்தர்யா முரளி
ஒருங்கிணைப்பு: ஜெயஸ்ரீ & கார்த்திகேயன் வெங்கட்ராமன்