உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்
43வது ஆட்டத்தில் பாகிஸ்தான்
வங்கதேச அணிகள் மோதின.
முதலில் விளையாடிய பாகிஸ்தான்
50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு
315 ரன் எடுத்தது.
இமாம் உல் ஹக் 100 ரன்,
பாபர் அசாம் 96 ரன் எடுத்தனர்.
316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
வங்கதேச அணி ஆடத்துவங்கியது.
நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனைத் தவிர
மற்ற அனைவரும் சொற்ப ரன்னில்
அவுட்டாயினர்.
ஹசன் 64 ரன்னில் ஆட்டமிழந்ததும்
வங்கதேசத்தின் தோல்வி உறுதியானது.
44.1 ஓவரில் 221 ரன்னில் ஆல் அவுட்டாகி,
94 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
6 விக்கெட் வீழ்த்தி
வங்கதேசத்தை சுருட்டிய
வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி
மேன் ஆப்தி மேட்ச் விருது பெற்றார்.